Friday, July 6, 2007

மின்னணுவியல் நகரம் - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி...!!!!

விடியற் காலை நேரம் கனிணி-நகர தார்சாலை நான் கடக்க...
என் முன் கிறிச்சிட்டு நின்றது கனரக வாகனம்...
என்னை பார்த்தல்ல...என்முன் நடந்த மாட்டை பார்த்து..!!!

த.நா-34 வாகன ஓட்டுனன்...என் ஊர்காரன்..... வசைபொழிந்தான் கொச்சையாய்...!!!
அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்....முன்னால் சென்றதை போல்...!!

ஏன் நானும் ஐந்தறிவானேன்.... உன்னை நினைத்தனாலோ....?