Wednesday, October 17, 2007

குழந்தை தொழிளாலர்கள்

அவன் வயது பண்ணிரென்டை தொடும்.!! கூவினான் "அண்ணா" பசி என்று…!!!
உதாசினபடுத்தினேன் ஏன் இவன் வேலை செய்யகூடாதென்று…!!!
நான் நன்கு உண்டு…வெளிவரும் போது கவனித்தேன் அந்த உணவகத்தில்…!!!!
"இங்கு குழந்தை தொழிளாலர்கள் வேலைக்கு அமர்த்தபடவில்லை" அறிவிப்பு..!!!
இதயம் கனத்தது…
என்முன் தோன்றியது அதரவற்ற அந்த சிறுவனின் முகமும்..கூறிய வரிகளும்!!!

பிரசவம்

ஒரு பெண் உயிர்விப்பது சேயைமட்டுமல்ல…!!!
ஒரு தாயையும் தான்…!!!

Friday, July 6, 2007

மின்னணுவியல் நகரம் - எலக்ட்ரானிக்ஸ் சிட்டி...!!!!

விடியற் காலை நேரம் கனிணி-நகர தார்சாலை நான் கடக்க...
என் முன் கிறிச்சிட்டு நின்றது கனரக வாகனம்...
என்னை பார்த்தல்ல...என்முன் நடந்த மாட்டை பார்த்து..!!!

த.நா-34 வாகன ஓட்டுனன்...என் ஊர்காரன்..... வசைபொழிந்தான் கொச்சையாய்...!!!
அதை கண்டுகொள்ளாமல் நடந்தேன்....முன்னால் சென்றதை போல்...!!

ஏன் நானும் ஐந்தறிவானேன்.... உன்னை நினைத்தனாலோ....?

Thursday, June 7, 2007

எங்க ஊர் (திருச்செங்கோடு) தேர்....!!!

உயரமோ நான்குமாடி கட்டிடம்
அகளமோ இரண்டானை தடினம்
நான்கு எழடிஉயர சக்கரம்
தேர் சுற்றிலும் பூமாலை தோரணம்சப்பரம் நடுவில் அர்த்தனாரிஸ்வரர் திருக்கோலம்
திரண்டிருந்த மக்களோ பல்லாயிரம்!!!


தேர் சுற்றிவர நான்கு‍‍‍- ரத வீதி
சுற்றிமுடிக்க மூன்று - நாள் தேதி
அன்று தேர் நில‌ம்சேறும் க‌டைசி தேதி!!!


அர்ச்ச‌னை ப‌ல‌முடிந்து முற்ப‌க‌ல் முன்ந‌ட‌க்க‌
ப‌ட்டாசு வேட்டு முழ‌ங்க‌ யானைக‌ள் பின்ந‌ட‌க்க‌
விள‌ம்ப‌ர‌ங்க‌ள் கூவிட‌ ஊர் ம‌க்க‌ள் திற‌ன்டிட‌
அர‌ம்ப‌மாயிற்று அன்றைய‌ தேர்‍‍‍‍‍ ப‌வ‌ன‌ம்!!!


இரும்பு வ‌ட‌ம் தேரில்பூட்ட‌ - அரைமைல் க‌ல்
நீண்ட‌து அந்த‌ க‌ன‌த்த‌ இரும்பு ச‌ங்கிலி
சுற்றியிருந்த‌ ம‌க்க‌ள் கைபிடிக்க‌
நானும் முன்னேறினேன் அதை பிடிக்க‌
ஆனால் கிடைக்க‌ பெற்ற‌தோ கைக‌ள்தான்-
ச‌ங்கிலி இல்லை!!!


சாணை க‌ட்டைக‌ள் முட்டுகுடுக்க‌
ஊதுவோர் ஊத.. யானைக‌ள் முட்ட‌
கையோடு கை சேர்த்து கை‍-ச‌ங்க‌லியால் தேரை க‌ட்டியிழுக்க‌
அசைந்தாடிய‌து அழங்கார‌ குன்று!!!


வெற்றுகாலை வெயில் வெட்டியெடுக்க‌
முன்னெறினோம் ம‌திய‌வெயிலில் ம‌ண்டைபிள‌க்க‌!!!


குழந்தையை போல் அசைந்தாடியும்
கும‌ரி போல் அண்ண‌ந‌டையும்
ப‌ருவ‌ப்பெண் போல் க‌டைக‌ண்பார்த்தும்
நில‌ம்சேர்ந்த‌து அம்மைய‌ப்ப‌ன் தேர்!!!


குறிப்பு:

1. நிலை சேர்த்தல் = தொட‌ங்கிய‌ இட‌ம் வ‌ந்து சேர்த‌ல்
2. அர்த்தனாரிஸ்வரர் = அம்மைய‌ப்ப‌ன் = ஆண்பாதி (சிவ‌ன்) பெண் பாதி (பார்வ‌தி) க‌ல‌ந்த‌ தோற்ற‌ம்.இவ்வாறான‌ சிவ‌‍-பார்வ‌தி தோற்ற‌த்தை திருச்செங்கோட்டில் ம‌ட்டுமே பார்க்க‌ முடியும். இது இத்திருத‌ல‌த்தின் சிற‌ப்ப‌ம்ச‌மாகும்.

Also see: Posted on http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html

கனவு...!!

கனவில் ஒரு கண் இமைத்தாய்,
நடுநிசியில் இரு கரம் பிடித்தாய்,
வைகரையில் எனை வாழ்வித்தாய்,
கண் விழித்தேன்................!!!!!!!!!!!


ஞாபகம் வந்தது நேற்று நான் படித்த கலாமின் வரிகள்.......
"இளைஞர்கள் பெரிய கனவு காண வேண்டுமென்று..!!!"
..
..
..
காத்திருக்கிறேன் அடுத்த கனவிற்கு
இன்னும் பெரிய கனவிற்கு.....!!!

இளமை....!!!!!!!!

அழுவலக வருகை பதிவேட்டில்...புதுபெயர்கள்...!!!!
.
.
.
.
அனைத்தும் அழகான பெண்களாய் இருக்க..ஆசை...!!!

எதிர்மறை...!!!

இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் - யானை
ஆனால் தெருவில் எடுப்பதோ பிச்சை.....!!!

நாடு, நதி ஏன் தொலைகாட்சி தொடர்களின் பெயர்களில் கூட- பெண்மை
ஆனால் அனுபவிப்பதோ வன்மை..கொடுமை...!!!

திரைபட நாயகன் தொழிலோ அடி, உதை ரவுடி
ஆனால் அவனே கதாநாயகன்....!!!


ஏன் இந்த உலகம் எதிர்மறையை தான் விரும்புகிறதோ....????

பங்குசந்தை

பங்குசந்தையின் ஏற்றஇற‌க்கதில் நாம் இழப்பது‍: நம் பணத்தை,
மகளிரின் ஏற்றஇற‌க்கதில் நாம் இழப்பது‍: நம் மனதை....!!!!

Tuesday, March 6, 2007