Sunday, May 1, 2022

ஓர் ஆணிடம் தந்தைக்கான முதிர்ச்சி ஒரு குழந்தை பெற்றவுடன் தொடங்குகிறது!!
ஆனால் பெண்ணிடம் தன் தங்கை/தம்பி பிறந்தவுடனே தொடங்குகிறது!!

#யாழினி

Thursday, October 20, 2016

மழலை கவிதை....

மழையில் நனைந்து பள்ளி செல்லும்    அன்பு மகளின் மழலை கவிதை:

"பெய்யும் மழையை வானவில் அழித்துவிட........ மழை தன் வீடு சென்று அழுகிறது..!!!!!! ".

கரு....ச. யாழினி.
எழுத்து செ.சந்தோஷ்(மகிழன்). 

Thursday, December 3, 2015

§§§§§§§........வேண்டும் மழை.........§§§§§§

உதவாக்கரை அரசியல்வாதிகளின் தோளுரிக்க....!!!
உதவும் கரம் ஊர் முழுக்க உள என்றரிய..!!!
நாம் மழைக்கு செய்த பிழை அரிய....!!!
செய்த பிழையை எப்பிடி திருத்த என்றரிய...!!!
சாதி, மதத்தை விட சுற்றமும் நட்பும் உயர்ந்ததென்றரிய...!!!
இயற்கையின் முன் நாம் ஒன்றென்றரிய....!!!
சொல்லும் நேரம், காலம் தவராமல் கூட்டிசெல்லும் மகிழ்வுந்தை விட...
ஐந்தடி நீரிலும் சுகம், சுமை பாராமல் கரை சேர்க்கும் அரசு பேருந்தே சிறந்தது என்றரிய..!!!
"தனி ஒருத்தி" அரசு இயந்திரத்தை முடக்குதலும்..
"நமக்கு நாமே" என்ற நாமம் நீரில் கரைதலும்...
இனி நமக்கு உதவாது என்றரிய...!!!
மானிடா........மழை வேண்டாம் என்றென்னாமல்,
குடுத்த கொடையை சேமிக்க கற்றுகொள்...!!!
வேண்டும் மழை வேண்டும்..!!!
- பிழை

Friday, September 5, 2014

ஆசிரியர் தினம்..!! - என் தமிழாசிரியர் பூவராகவன்..!!!

அறிவியல், புவியியல் கற்குமுன்
”அகரம்” கற்றுகொடுத்தவன்,

தாய் கற்றுதரும் முதல் மொழிக்கும் பிறகு
தாமாய் நாம் கற்கும் பழ மொழிகளுக்கும் ஊற்றானவன்.


மணனம் செய்ய தேவையில்லை
மதிப்பீடுகள் பற்றி பயமும் இல்லை,

அவரவர் வாழ்க்கைக்காக பாடம் பலர் எடுக்க,
வாழ்க்கை கல்வி, சமூகநெறி பற்றி பேச இவர் மட்டுமே...!!!

வரலாற்று ஆசிரியர் பிறநாடு பற்றி பேச
வள்வில் ஓரி வரலாற்றை நமக்குரைத்தவர்...

சுருக்கமாக நான்,என் என்ற தன்னிலை மறந்து
நாம் என்று பொதுநலமாக வாழகற்று கொடுத்தவர்

பெண்கள் மீதான மதிப்பை மதிப்பெண் காட்டிலும்
மதிக்க கற்றுகொடுத்தவர்.....!!!

வாழ்க அவர் பணி... சிறக்க அவர் தொண்டு..!!

Wednesday, January 26, 2011

கருப்பு குடியரசு..!!!!

இலங்கை-தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு.!!

ஆம்  இது கருப்பு குடியரசு...!!!
தேசிய கொடியை என் நெஞ்சில் குத்தியனால்......
மீனவனின் ரத்தம் வரக் கண்டேன்..!!!!
ஏனோ எனது மனம் கொண்டாடவில்லை..!!!
இந்த பிரிவினையை.............!!!!


Thursday, April 8, 2010

தேடுகிறேன்........!!!

தேடுகிறேன் முதல் முறையாய்.......

கம்பனும் காளிதாசனும் பெண்களுக்காக
மை பிடிக்க.... 

முதன் முதலாய் தேடுகிறேன்.....
வார்த்தைகளை என்னவளுக்காய்....

கிறுக்கள்களில் பிறந்து
கவிதை...
புழம்பலில்  பிறந்து
முடிவு....

உனை பற்றி என் தேடலும் அப்பிடிதான்
போலும்.....

என் வீட்டு செல்லக் குட்டி எழுதி பழகிய
மெல்லினதில்-இடையினத்தில் உன் பெயர்
தேடி பார்கிறேன்..............

வானம் வரைந்துவிட்ட கோலங்களில்
உன் முகம் தேடுகிறேன்.....

நேற்று கேட்ட குயிலின் ஒசையிலும்
உன் குரல் இல்லை....
என்ன கண்களால் கவி பேசுபவளோ நீ..?

அம்மா போட்ட காபியின் கை மணத்தில்
உன் ஸ்பரிசம் இல்லை....

மாலை மயங்கும் அந்திநேர கதிரவன்
நிறத்தவளா நீ??? தேடுகிறேன்....

காட்டிவிட்டுப்போ உன் திருமுகத்தை...
ஒருமுறையேனும் என் வீட்டு பூக்களும்
வெட்கப்படட்டும்...

எப்போது களவாட போகிறாய் என்
காத்திருக்கும் கைதியாய் நான்..!!!

Sunday, March 21, 2010

கிட்டுமோ..!!!

அரை காணி நிலம்
அதில் ஒரு குடிசை......

மின்விளக்கு வேண்டாம்
மண்விளக்கு போதும்.....

உலகம் அறிய சில புத்தகம்...
உடற்பயிற்சிக்கு உழவு.....

இனிய காதல் - அதற்கு அத்தாட்சி ஒரு
இல்லத்து அரசி...!!!

ஆனால் இவைதானா இந்த உலகம் நமக்கு சொல்லி கொடுத்தது????????

உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...
உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது..

முற்பகல் கீதம் கேட்ட குயில்கள் போய்
முன்பதிவு செய்த இசைகள் மட்டுமே......

மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி
மெயில் சேவையில் உறவை பறிமாற்றியது

ஐயம் போக்க வந்த கூகில் - அறிவுவளர்க்க எனமாறி
ஐ-போனை ஆறாம் விரல் ஆக்கியது

விவசாயமும் விதை-நெல்லும் இல்லாவிடிலும்...
வேளச்சேரியிலும் வடவெள்ளியிலும் இருக்கிறது - பல காணி நிலம்

உலகம் சுற்றும் வாலிபனையே - வாழ்க்கையில்
உருப்பட தெரிந்தவனாக்கியது

"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"
இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் -

எவை நமக்கு வேண்டும் என- தெரியும் முன்
வேண்டா பலவற்றை சுமக்கிறோம் நாம்...........
எதைவிடுவது இப்போது......???

முடிந்த நம் பால்யத்தில் - மூதாதையர் சேர்த்து வைத்த
பாரம்பரியத்தை தேடுகிறோம்......!!!! - கிட்டுமோ

Friday, July 31, 2009

நீயே உனக்கு கடவுள்..!!!

உனது தவறை நீ உணர்ந்தால்....!!!
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?

Tuesday, July 21, 2009

கிரகணம்..!!

தத்துவமும் விஞ்ஞானமும் என்னதான் கூறினாலும்

அனைத்தையும் தாண்டியது இனிமையான
அந்த இயற்கையின் அற்புத நிகழ்வு..!!

கவிஞனின் கண்ணில்.....
இயற்கை என்னும் காதலன்..... நாணும் காதலியின் கரம்பிடித்து
அணிவிக்கும் வைர மோதிரம்..!!!

Wednesday, June 10, 2009

தனிமை..!!!

தனித்திருப்பது மட்டும் தனிமை என்றால்
இது தனிமை இல்லை..!!!

எப்போதும் கண்முன் கணினி...!!
எண்ணும் போது அரட்டை அடிக்க என்அறை நண்பர்கள்..!!

நினைத்ததும் கேட்க ராஜாவின் இசை..!!
நினைத்த நொடியில் வெளிநாட்டு தொலைபேசி வசதி..!!

விட்டுவைக்க நேரம் இன்றி வேலை..!!
வேலை செய்யவும் மனம் இல்லை..!!

வாரம் இரண்டு விடுமுறை..!!!
இருந்தும் ஊர் சுற்ற மனம் இல்லை..!!

வென்றுவிடதான் நினைக்கிறேன்..!!
இருந்தாலும் தினமும் என்னை ஜெய்கிறது இந்த தனிமை..!!