அரை காணி நிலம்
அதில் ஒரு குடிசை......
மின்விளக்கு வேண்டாம்
மண்விளக்கு போதும்.....
உலகம் அறிய சில புத்தகம்...
உடற்பயிற்சிக்கு உழவு.....
இனிய காதல் - அதற்கு அத்தாட்சி ஒரு
இல்லத்து அரசி...!!!
ஆனால் இவைதானா இந்த உலகம் நமக்கு சொல்லி கொடுத்தது????????
உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...
உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது..
முற்பகல் கீதம் கேட்ட குயில்கள் போய்
முன்பதிவு செய்த இசைகள் மட்டுமே......
மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி
மெயில் சேவையில் உறவை பறிமாற்றியது
ஐயம் போக்க வந்த கூகில் - அறிவுவளர்க்க எனமாறி
ஐ-போனை ஆறாம் விரல் ஆக்கியது
விவசாயமும் விதை-நெல்லும் இல்லாவிடிலும்...
வேளச்சேரியிலும் வடவெள்ளியிலும் இருக்கிறது - பல காணி நிலம்
உலகம் சுற்றும் வாலிபனையே - வாழ்க்கையில்
உருப்பட தெரிந்தவனாக்கியது
"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"
இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் -
எவை நமக்கு வேண்டும் என- தெரியும் முன்
வேண்டா பலவற்றை சுமக்கிறோம் நாம்...........
எதைவிடுவது இப்போது......???
முடிந்த நம் பால்யத்தில் - மூதாதையர் சேர்த்து வைத்த
பாரம்பரியத்தை தேடுகிறோம்......!!!! - கிட்டுமோ
Sunday, March 21, 2010
Friday, July 31, 2009
நீயே உனக்கு கடவுள்..!!!
உனது தவறை நீ உணர்ந்தால்....!!!
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?
Tuesday, July 21, 2009
கிரகணம்..!!
தத்துவமும் விஞ்ஞானமும் என்னதான் கூறினாலும்
அனைத்தையும் தாண்டியது இனிமையான
அந்த இயற்கையின் அற்புத நிகழ்வு..!!
கவிஞனின் கண்ணில்.....
இயற்கை என்னும் காதலன்..... நாணும் காதலியின் கரம்பிடித்து
அணிவிக்கும் வைர மோதிரம்..!!!
அனைத்தையும் தாண்டியது இனிமையான
அந்த இயற்கையின் அற்புத நிகழ்வு..!!
கவிஞனின் கண்ணில்.....
இயற்கை என்னும் காதலன்..... நாணும் காதலியின் கரம்பிடித்து
அணிவிக்கும் வைர மோதிரம்..!!!
Wednesday, June 10, 2009
தனிமை..!!!
தனித்திருப்பது மட்டும் தனிமை என்றால்
இது தனிமை இல்லை..!!!
எப்போதும் கண்முன் கணினி...!!
எண்ணும் போது அரட்டை அடிக்க என்அறை நண்பர்கள்..!!
நினைத்ததும் கேட்க ராஜாவின் இசை..!!
நினைத்த நொடியில் வெளிநாட்டு தொலைபேசி வசதி..!!
விட்டுவைக்க நேரம் இன்றி வேலை..!!
வேலை செய்யவும் மனம் இல்லை..!!
வாரம் இரண்டு விடுமுறை..!!!
இருந்தும் ஊர் சுற்ற மனம் இல்லை..!!
வென்றுவிடதான் நினைக்கிறேன்..!!
இருந்தாலும் தினமும் என்னை ஜெய்கிறது இந்த தனிமை..!!

Friday, July 11, 2008
இயற்கையாம் இயற்கை..!!!
இயற்கையை திட்டுகிறேன்... !!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!
ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?
பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!
சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..
இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!

Friday, June 13, 2008
பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!
ஆம்....!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!
அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!
விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!
தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!
பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!
ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!
பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்
அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!
Wednesday, January 9, 2008
Wednesday, October 17, 2007
குழந்தை தொழிளாலர்கள்
அவன் வயது பண்ணிரென்டை தொடும்.!! கூவினான் "அண்ணா" பசி என்று…!!!
உதாசினபடுத்தினேன் ஏன் இவன் வேலை செய்யகூடாதென்று…!!!
நான் நன்கு உண்டு…வெளிவரும் போது கவனித்தேன் அந்த உணவகத்தில்…!!!!
"இங்கு குழந்தை தொழிளாலர்கள் வேலைக்கு அமர்த்தபடவில்லை" அறிவிப்பு..!!!
இதயம் கனத்தது…
என்முன் தோன்றியது அதரவற்ற அந்த சிறுவனின் முகமும்..கூறிய வரிகளும்!!!

Subscribe to:
Posts (Atom)