Sunday, March 21, 2010

கிட்டுமோ..!!!

அரை காணி நிலம்
அதில் ஒரு குடிசை......

மின்விளக்கு வேண்டாம்
மண்விளக்கு போதும்.....

உலகம் அறிய சில புத்தகம்...
உடற்பயிற்சிக்கு உழவு.....

இனிய காதல் - அதற்கு அத்தாட்சி ஒரு
இல்லத்து அரசி...!!!

ஆனால் இவைதானா இந்த உலகம் நமக்கு சொல்லி கொடுத்தது????????

உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...
உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது..

முற்பகல் கீதம் கேட்ட குயில்கள் போய்
முன்பதிவு செய்த இசைகள் மட்டுமே......

மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி
மெயில் சேவையில் உறவை பறிமாற்றியது

ஐயம் போக்க வந்த கூகில் - அறிவுவளர்க்க எனமாறி
ஐ-போனை ஆறாம் விரல் ஆக்கியது

விவசாயமும் விதை-நெல்லும் இல்லாவிடிலும்...
வேளச்சேரியிலும் வடவெள்ளியிலும் இருக்கிறது - பல காணி நிலம்

உலகம் சுற்றும் வாலிபனையே - வாழ்க்கையில்
உருப்பட தெரிந்தவனாக்கியது

"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"
இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் -

எவை நமக்கு வேண்டும் என- தெரியும் முன்
வேண்டா பலவற்றை சுமக்கிறோம் நாம்...........
எதைவிடுவது இப்போது......???

முடிந்த நம் பால்யத்தில் - மூதாதையர் சேர்த்து வைத்த
பாரம்பரியத்தை தேடுகிறோம்......!!!! - கிட்டுமோ

2 comments:

  1. hi,
    thanks for your kavithai. i published it in tiruchengode blog. http://tiruchengode.blogspot.com/2010/04/blog-post.html

    regards
    Gayathri.s

    ReplyDelete
  2. //"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"
    இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் //
    ஆன்சைட்டு போகாத சாப்டுவேர் இன்ஞியர் பாதி இன்ஞினியர்.

    //மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி//
    கரெக்ட், பொன்னுதரலன்ன பரவால்லை, பொண்னும்குடுக்க மாட்டாக.

    //உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...
    உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது//

    ஐ திங்கிங்கிங், யு டெல்லிங். யு ரைட் குட்.

    ReplyDelete